பெரும் போகத்தில் 60,000 ஹெக்டெயர் சோளத்தை பயிரிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கால்நடைகளின் உணவுக்காக பயன்படுத்தப்படும் சோளம் பற்றாக்குறை காரணமாக தற்போது பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

இறக்குமதிக்கு போதிய அந்நிய செலாவணி இல்லாததாலும், சோளம் விளையும் நாடுகள் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்யாததாலும் கால்நடைகளுக்கான உணவு பற்றாக்குறை நிலவுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனால், எமது நாட்டுக்குத் தேவையான சோளத்தை பயிரிடுவதைத் தவிர வேறு வழியில்லை. பெரும் போகத்தில் சோளச் செய்கைக்குத் தேவையான முழு விதைகளையும் வழங்க விவசாய விதை உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது