(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஏறாவூரைச் சேர்ந்த பிரபல கவிதாயினி 

டாக்டர் ஜலீலா முஸம்மில் 'செம்மொழி கவிமாமணி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட பசுமை வாசல் பவுண்டேஷன், 

குமரி மாவட்ட தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி மாவட்ட

காமராஜர் இளைஞர் வளர்ச்சி பேரவை, சேலம் மாவட்ட ஆத்தூர் ஸ்ரீ சக்ஸஸ் அகடமி & பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் 

காமராசரின் பிறந்த நாளான எதிர்வரும் ஜூலை - 15 ஆம் திகதியை முன்னிட்டு நடாத்திய பல்துறை சாதனையாளர்களுக்கான "பெருந்தலைவர் காமராசரின் மாமணி விருதுகள் - 2022" வழங்கும் நிகழ்வில் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புக்காக, இலங்கையிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் எனும் ஊரைச் சேர்ந்த கவிதாயினி 

டாக்டர் ஜலீலா முஸம்மில் 'செம்மொழி கவிமாமணி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.