பஸ் கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்கபட்டிருக்கின்றன.

தேசிய  போக்குவரத்து ஆணை குழுவுக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், ஆக குறைந்த கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 


அதாவது 32 ரூபாயாக இருந்த ஆகக்குறைந்த கட்டணம் எட்டு ரூபா அதிகரிப்புடன் 40 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.

   இந்த மாற்றம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.