மே மாதத்திற்கான ஓய்வூதியம், கமத்தொழிலாளர்கள், மீனவர்களின் ஓய்வூதியம், முதியோர் மற்றும் பொது நிதி உதவிகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அதனை வழங்குவதற்காக அஞ்சல் நிலையங்களை இரண்டு தினங்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாளை (28) நாளை மறுதினம் (29) ஆகிய இரண்டு தினங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அஞ்சல் நிலையங்கள் திறந்திருக்கும் என அஞ்சல் மா அதிபர் அறிவித்துள்ளார்.

கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.