பாயிஸின் மரணம் தொடர்பில் மூவர் கைது


புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ பாயிஸின் மரணம் தொடர்பில் அவருடைய ஓட்டுனர் மற்றும் கெப்பில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையில் அவர்கள் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

நகர சபை தலைவர் சிலருடன் ரால்மடம குளத்தில் குளித்துவிட்டு வாகனத்தில் பின்னர் அமர்ந்து சென்ற சந்தர்ப்பத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டடோ அல்லது வேறு முறையிலோ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை 5.30 மணிக்கும் 6.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணம் தொடர்பில் பொலிஸார் பூரண விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்