கொரோனாத் தொற்றைக் காரணம் காட்டி மே தின நிகழ்வுகளைத் தடை செய்தது அரசு!


ராஜபக்ச அரசுக்குள் வெடித்துள்ள பூகம்பத்தால் அதன் முக்கிய பங்காளிக் கட்சிகள் இம்முறை மே தின நிகழ்வுகளைத் தனித்தனியே நடத்த முடிவெடுத்துள்ள நிலையில், அதனை அடக்கும் வகையில் இராணுவத் தளபதியூடாக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய இம்முறை மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் இரத்துச் செய்ய கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தீர்மானித்துள்ளது என அதன் தலைவரான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

"தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக எந்தவொரு மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்த வேண்டாம் எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் கேட்டுக்கொள்கின்றது.

இந்தத் தீர்மானத்துக்கு இணங்க அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும். கொரோனாவின் மூன்றாவது அலை உருவெடுக்க எவரும் இடம் கொடுக்கக்கூடாது. மக்கள் அனைவரும் முறையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" - என்றார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK