ராஜபக்ச அரசை வீழ்த்துகின்ற நிலையில் அதன் பங்காளிக் கட்சிகள் ஒருபோதும் இருக்காது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வவுனியாவில் நேற்று ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
அரசுக்குள் சில குழப்பங்கள் ஏற்பட்டிருந்தாலும் உடனடியாக அரசில் மாற்றம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை. அதில், ஒரு பலவீனமான நிலையை ஏற்படுத்தலாமே தவிர, அரசை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளிக் கட்சிகள் இருக்காது.
இதேவேளை, மாகாணசபைத் தேர்தலில் தொகுதிக்கு மூன்று பேரை நியமிப்பது என்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் யோசனை நாட்டின் எந்தப் பகுதிக்கும் சாத்தியமில்லாத மற்றும் குழப்புகின்ற ஒன்றாகும்.
ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொருவரை நிறுத்திவிட்டு அவற்றைத் தாம் வென்றெடுக்கலாம் என்று பஸில் ராஜபக்ச எண்ணியிருக்கலாம்.
அதற்காக இப்படியொரு திட்டத்தை வைத்திருக்கலாம். இது ஜனநாயகத்தையும், அரசியல் கட்சிகளையும் கேலிக்கிடமாக்கும் விடயமாகவே நான் பார்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK