கொரோனா தடுப்பூசி போட்ட இருவர் மரணம் - பிரதி சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட முக்கிய தகவல்


கோவிட் தடுப்பூசி போட்ட பின்னர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அந்த மரணங்கள் கோவிட் தடுப்பூசியால் நிகழ்ந்ததென கருத்திற்கொள்ள முடியாதென பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அவை தடுப்பூசி பெற்ற பின்னர் நிகழ்ந்த மரணம் மாத்திரமே. தடுப்பூசி பெற்றதால் நிகழ்ந்த மரணம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோவிட் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் தொடர்ந்து இரண்டு நாட்கள் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை நாட வேண்டியது அவசியமாகும். தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் ஓய்வாக இருப்பது மிகவும் அவசியம் என பிரதி சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK