ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மாற்றியுள்ளதாக ஞானசார தேரர் குற்றச்சாட்டு


ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முற்றிலும் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு சதித்திட்டம் இருப்பதாகவும் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ஈஸ்டர் ஆணைக்குழுவின் அறிக்கை சூழ்ச்சிகரமான மாற்றியது ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவர், அதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கோ, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கோ தொடர்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஞானசார தேரர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக எப்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியாது.

எனினும் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாக என்னை மாற்றியுள்ளனர்.

2025 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வர வேண்டும் என்பது ராஜபக்சவினரின் எதிர்பார்ப்பு.

அதற்கு சவாலான அனைவரையும் அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது அவர்களின் எதிர்ப்பார்ப்பு எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK