கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முசலி பகுதியில் இடம் வழங்க தயார் - முசலி தவிசாளர்


கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான இடத்தினை முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரும்  முசலி பிரதேச சபையின் தவிசாளருமான  ஏ.ஜ.எச் சுபிஹான் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் சுகாதார தரப்பினருடன் அது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டு இணக்கப்பாடுகள் ஏற்பட்டதன் பின்னர் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்தார்.

கொவிட்19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட அதற்கான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில்  வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறு கொவிட்19 தொற்றினால் உயிரிழப்பவர்களை  இரணை தீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்தார்.

எனினும், இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைத்தீவு மக்கள் கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டிருந்தனர்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே அவ்வாறான சடலங்களை  முசலி பகுதியில் நல்லடக்கம் செய்வதற்கான இடத்தினை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அந்த பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஜ.எச் சுபிஹான் தெரிவித்தார்.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK