ஜனாஸா நல்லடக்கம் : மீண்டும் பின்னோக்கி நகர்கின்றது – சபையில் ஆவேசமடைந்தார் ஹக்கீம்


சுகாதார அமைச்சு என்ற விதத்தில் தமக்கு தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை எட்ட முடியாது எனவும், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவின் ஊடாகவே தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.

கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

பிரதமரினால் வெளியிடப்பட்ட கருத்து எப்போது வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரகுமான், எழுப்பிய கேள்விக்கே, இராஜாங்க அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சபையின் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.

நாட்டில் பிரதமர் தீர்மானமொன்றை எட்டி, சபையில் அறிவித்ததன் பின்னர், அதனை மாற்றியமைப்பது சரியானதாக இருக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார். சுகாதார அமைச்சில் யார் இதனை முடக்குவது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் தேவையற்ற விதத்தில், நாட்டிற்குள் அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் எனவும், இது தற்போது ஜெனீவா வரை சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK