ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து தப்பினார் ரணில் : மாட்டினார் மைத்திரி


இலங்கையில் 2019ம் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கான பரிந்துரைகளை தமது அறிக்கையின் ஊடாக முன்வைக்கவில்லை என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு சபை கூட்டங்களில் கலந்துக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அனுமதி அளிக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியிருந்தார்.

2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட அரசியலமைப்பு குழப்பத்திற்கு பின்னர், தன்னை பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு அழைக்கவில்லை என பிரதமர், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்திருந்தார்.

இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீதே, குற்றவியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துமாறு, ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தமது அறிக்கையின் ஊடாக பரிந்துரை செய்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் திகத, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இவ்வாறு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. 

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK