அமைச்சர் விமல் வீரவன்ச தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றி வருகின்றாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பனிப்போரை வெளியில் பொம்மைகளை வைத்து ஆடி வருவதை காணமுடிகின்றது.

இவ்வாறு ஆடுவதன் மூலம் அரசாங்கத்தின் தலையே துண்டிக்கப்படும். மக்கள் இந்த நிலைமை குறித்து மிகவும் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும் எனவும் ஹப்புஹாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.