எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அரசாங்கத்தின் முக்கிய ராஜாங்க அமைச்சர் மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்திற்கு வந்து, வெளியில் செல்லும் சந்தர்ப்பத்தில் அவரை சந்திப்பதற்காக இவர்கள் காத்திருந்துள்ளனர்.

ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, சாரதி துஷ்மன்ன மற்றும் பிரேம்நாத் சீ தொலவத்தை ஆகியோரே எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தான் தலைவராக இருந்த போதிலும் விசேட மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே செயற்படுவேன் என இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

கொரோனா உடல்களை அடக்கம் செய்வதில் பிரச்சினையில்லை என்று மருத்துவர்கள் கூறியிருந்தால் , அதனை செய்வதில் பிரச்சினையில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, கொரோனா உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பட்டிலேயே தானும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இந்த பேச்சுவார்த்தை நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது.