ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமைத்துவம் தொடர்பில் கருத்து வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அரசை விட்டு வெளியேற தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

சற்றுமுன் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் 12 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற விமல் வீரவன்சவின் வீட்டிற்கு செல்லும் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கே இன்று கட்சித் தலைவர்கள் கூடியுள்ளதாகவும் இந்த அரசு ஆட்சிக்கு வர விமலின் பங்களிப்பு இருந்ததை செய்நன்றி உடைய எவரும் மறந்துவிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.

 Sive Ramasami