ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.

ஹரின் பெர்னாண்டோ, முஜிபுர் ரஹ்மான், ஹேசா விதானகே, மனுஷ நாணயக்கார உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள மறுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமைக்கு அமைய தான் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை தவிர்த்துக்கொண்டுள்ளதாக மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

தம்மை விட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள் போன்ற சமூகத்துடன் அடிக்கடி தொடர்பில் இருக்கும் பல்வேறு மட்டத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி அவசியம் எனவும், தனக்கு வழங்கப்படும் தடுப்பூசி இப்படியான ஒருவருக்கு வழங்கப்பட்டதால் அவர்களை குணப்படுத்த முடியுமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டதுடன், அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, ஹர்சன ராஜகருண, திஸ்ஸ அத்தநாயக்க, திலிப் வெத ஆராச்சி ஆகியோர் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்