நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் அதனைச் செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டால் நாட்டை முடக்கக்கூடிய இயலுமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை கடுமையான கடன் சுமையினால் சிக்குண்டுள்ளது, இந்த நிலையில் நாட்டை முடக்கிக் கொண்டிருக்கும் பொருளாதார இயலுமை கிடையாது.

அதனைச் செய்ய வேண்டிய நிலை இருந்தாலும் முடக்கும் சாத்தியமில்லை” என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.