பிரதமரை அவதூறு செய்ய வேண்டாம் - அரசாங்கத்திடம் ரவூப் ஹக்கீம் கோரிக்கை


பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அவதூறு செய்ய வேண்டாம் என ஆளும் கட்சியினரிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கோவிட் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளே அமுல்படுத்தப்படும், தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களின் பிரகாரம் தீர்மானம் எடுக்கப்படாது என ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே நாடாளுமன்றில் இன்று தெரிவித்திருந்தார்.

இந்தக் கூற்றுக்கு ரவூப் ஹக்கீம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.

அரசாங்கத்தின் சார்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு எனவும், நிபுணர் குழுவினர் எதற்காக சடலங்கள் நல்லடக்கம் செய்வதனை தடுக்கின்றார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமரை அவுதூறு செய்யும் வகையில் ஆளும் கட்சியினர் செயற்படக் கூடாது எனவும், அனுபவம் மிக்க அரசியல்வாதியான பிரதமர் அனுபவ முதிர்ச்சியுடன் ஊடாக காலம் தாழ்த்தியேனும் சரியான தீர்மானத்தை எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சடலங்களை எரிப்பது இன முரண்பாட்டுக்கு வழியமைக்கும் என்பதனை ஆளும் கட்சி நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK