அமைச்சர் விமல் வீரவன்ச பொதுஜன பெரமுன தலைமைத்துவம் தொடர்பில் குறிப்பிட்ட விடயம் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் ராஜபக்‌ஷ சகோதர்கள் ஜனாதிபதியின் வீட்டில் இரவு போசன விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து அங்கு ஒன்று கூடி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்து உபசாரத்தில் ராஜபக்‌ஷ குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்துகொண்டுள்ளதாக  கூறப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ,அமைச்சர் சமல், முன்னாள் அமைச்சர் பெசில் , உள்ளிட்ட அனௌவரும் கலந்துகொண்டுள்ளனர்.

இங்கு சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.