சீனாவில் பிபிசி உலக சேவைக்கு தடை


பிபிசி உலக சேவையை சீன நாட்டு அரசாங்கம் நேற்று தடைசெய்துள்ளது. பிபிசி உலக சேவையானது உண்மை மற்றும் நியாயமற்றது என, அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

செய்தி உண்மையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும், சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது’ என, சீன நிருவாகத்தை மேற்கோள்காட்டி அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் தெரிவித்துள்ளன.

பிபிசி ஆங்கில மொழி செய்திச் சேவையானது, சீனாவின் அதிகமான தொலைக்காட்சிகளில் இடம்பெறவில்லை. ஆயினும் சில ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் காணக் கிடைத்தது. சீனாவின் இந்த நடவடிக்கை தொடர்வில் தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக பிபிசி உலக சேவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ‘ட்விட்டர்’ பதிவொன்றை வெளியிட்டுள்ள பிபிசி செய்திப் பிரிவு; ‘உலகில் மிகவும் நம்பகத்தன்மையான செய்திச் சேவையாக பிபிசி உள்ளது. நேர்மையாகவும் பாரபட்சமின்றியும், அச்சமில்லாமலும் பக்கச்சார்பின்றியும் செய்திகளை பிபிசி வழங்குகிறது’ என்றும் தெரிவித்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK