சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்; மக்கள் காங்கிரஸ் கருவுடன் சந்திப்பு!

நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில்,  இன்று (01) சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம், கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதற்காகவும், விசேடமாக முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் எதிர்ப்பினை வெளியிட்டமைக்கும், அவ்வமைப்புக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

அத்துடன், சிறுபான்மை சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள காணிப் பிரச்சினை, இராணுவமயமாக்கல் போன்ற இன்னோரன்ன பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினர்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், சிரேஷ்ட பிரதித் தலைவர் சஹீட் மற்றும் பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோர் கலந்துகொண்டனர்.









BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK