அனுராதபுரத்தில் அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற ஒரு கொடூரமான சம்பவம் தொடர்பாக அந்த இல்லத்தின் பிரதான பராமரிப்பளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை கடுமையான பிணை விதிமுறைகளுக்கமைய விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று அனுராதபுர தலைமை நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ஜனக பிரசன்னவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன் போது அவரை 2 இலட்சம் ரூபா சரீர பிணை இரண்டு மூலம் விடுதலை செய்வதற்கு தலைமை நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்த சம்பவத்தில் சாட்சி வழங்கிய நபர்களை மிரட்ட வேண்டாம் எனவும், அவ்வாறு மிரட்டினால் தண்டனை கடுமையானதாக இருக்கும் எனவும்நீதவான் குறித்த சந்தேக நபரை எச்சரித்திருந்தார்.