லோரன்ஸ் செல்வநாயகம்
இனி இது சாத்தியப்படாத விடயம் தேர்தல் ஆணைக்குழு தலைவர் திட்டவட்டமாக அறிவிப்பு புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு மன்னாரில் வாக்களிக்க முடியாது. இனிமேல் இது சாத்தியப்படாத விடயமென தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், (19) தோ்தல் ஆணைக்குழுவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
இதன்போதே அவர் இதனை திட்டவட்டமாக அறிவித்தார். கடந்த கால யுத்தத்தினால் மன்னார், வன்னி மாவட்ட மக்கள் சிலர் புத்தளத்தில் இடம்பெயா்ந்து வாழ்கின்றனர். இம் மக்களின் பெயர்கள் மன்னார் பிரதேசத்திலுள்ள தேர்தல் இடாப்பில் இம்முறை சேர்க்காது நீக்கப்பட்டுள்ளது. இது அவா்களது வாக்குரிமை மட்டுமல்ல அடிப்படி உரிமை மீறல்களாக இருக்கிறதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித் அவர், புத்தளத்தில் வாழ்ந்தால் அந்த மாவட்டத்திலேயே அவா்கள் தமது வாக்குகளை பதிய வேண்டும். அவர்கள் புத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு மன்னாரில் வாக்காளர்களாக பதிய முடியாது. அல்லது அவர்கள் அங்கு இருப்பிடம் வதிவிடம் இருப்பின் அங்கு சென்று வாழ வேண்டும். புத்தளத்தில் வீடு, பாடசாலை, தண்ணீ, மிண்சாரம், வீட்டு வரி, பாதை என்பவற்றை உபயோகிப்பார்களேயானால் அந்தப் பிரதேசத்திலுள்ள உள்ளுராட்சி, மாகணசபை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வாக்களித்தல் வேண்டும்.
இங்கு வதிவிடம் மன்னாரில் வாக்களிப்பதென்பது இனி சாத்தியப்படாத விடயம். அல்லது மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் அங்கு அவர்களுடைய வீடு, காணிகள், சொத்துக்கள் இருப்பின் அங்கு சென்று வாழ வேண்டும். அங்குள்ள கிராம சேவகரிடம் பதிய வேண்டும்.
ஆகவே இனிமேல் புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு இப் பிரதேசத்தில் சகல அரச அனுகூலங்களை அனுபவித்துக்கொண்டு மன்னாரில் வாக்குரிமை வழங்க முடியாது. அத்துடன் வாக்களிப்பதற்கும் நாங்கள் பிரயாணம் ஒழுங்குகள் செய்து கொடுக்க முடியாதென திட்டவட்டமாகச் தோ்தல் ஆணைக்குழு தலைவர் பதிலளித்தார். இது போன்று வடக்கில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன என்றும்அவர் தெரிவித்தார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK