ரிப்கான் பதியூதீன் உள்ளிட்ட மூன்று பேர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவான இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹாய்ல் இன்று நீதிமன்றுக்கு அறிவித்தார்.

போலி காணி உறுதிப்பத்திரங்களை உருவாக்கி தலை மன்னார் பகுதியில் உள்ள 80 ஏக்கர் காணியை விற்பனை செய்தமை தொடர்பில் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ள போதும் அவ்வாறான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஆராய்ந்த நீதவான், குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னெற்ற அறிக்கையை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்