ஆளும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அவ்வாறானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சிலரும் அதில் உள்ளடங்குவர்.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே!.
கொக்கலையிலுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அவருக்கு, உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்தப் புகைப்படத்தை ரவூப் ஹக்கீம், தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “நேற்றுமாலை சூரிய அஸ்தமனத்தின் போது, வழக்கமான சோதனையில், தனது உடல் வெப்பநிலை, நுரையீரலில் ஆக்ஸிஜன் அளவு பரிசோதிக்கப்பட்டுள்ளது” மாஷா அல்லாஹ் இதுவரை உடல்நிலை சிறப்பாக உள்ளது. எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK