ஜனாஸா எரிப்புக்கெதிராக குரல் கொடுத்த கரு ஜெயசூரிய, டி.யூ.குணசேகரவுக்கு முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றிகள்.


எஸ்.எம்.எம்.முர்ஷித் 

ஜனாஸா எரிப்புக்கெதிராக குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் டி.யூ.குணசேகர மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோருக்கு முஸ்லிம் சமூகம் சார்பில் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இன்று உலகலாவிய ரீதியில் பேசுபொருளாகவும் மிகப்பெரும் விமர்சனமாகவும் மாறியுள்ள இலங்கையில் மேற்கொள்ளப்படும் கட்டாய ஜனாஸா எரிப்பு விவாகரத்திற்கு சிங்கள பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள மூத்த அரசியல் பிரமுகர்கள்இ துறைசார் வல்லுனர்கள் கட்சிஇ பதவிகளுக்கப்பால் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றமை முஸ்லிம் சமூகத்துக்கு ஆறுதலளிக்கின்றது.

அந்த வகையில்இ மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் சிறி லங்கா கமியூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மதிப்பிற்குரிய டி.யூ.குணசேகர அண்மையில் நடந்த பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் மனோநிலையைப் புரிந்து கொரோனாவினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென தனியொரு மனிதனாக நின்று ஜனாஸா எரிப்புக்கெதிராக குரல் கொடுத்து தேசத்தின் தலைவர்களை தலைகுனிய வைத்தார்.

அத்தோடு பெளத்த மதத்துறவிகளை பின்புலமாக வைத்து ஜனாஸா எரிப்புக்கெதிராக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் முன்னாள் சபாநாயகரும் மூத்த அரசியல்வாதியுமான கரு ஜெயசூரிய அவர்களுக்கும் முஸ்லிம் சமூகம் என்றும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் கொரோனாவினால் மரணித்த தமது உறவுகளை தீயிட்டுக் கொழுத்துகின்றமை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் தம்மாலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற இன்றைய சூழலில் ஆட்சியாளர்களின் காதுகளில் எமது முஸ்லிம் சமூகத்தின் அழுகுரல் கேளாத நிலையில்இ எமது சமூகத்திலுள்ளவர்களே அநியாயத்துக்கு துணை போயுள்ள வேளையில் எமது சமூகத்தின் வலிகளை உணர்ந்து நீங்கள் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றமை எமக்கு ஆறுதலளிப்பதுடன் எமக்காக குரல் கொடுக்கும் உங்களுக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK