-யாழ். நிருபர் பிரதீபன்-
யாழ்.பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்றைய தினம் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடையத்தை உயர் அதிகரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்துமாறும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
பொலிஸாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK