தேவை என்றால் எனது இரண்டாவது பக்கத்தையும் காட்டத் தயார் - ஜனாதிபதி


அரசியலை முன்னிறுத்தி தான் செயற்பட தயாரில்லை எனவும் அவ்வாறு செய்வதை எதிர்கட்சிகள் விளங்க எடுத்துக்கொள்ளாமல் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

தனக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதாகவும் தேவை என்றால் அந்த இரண்டாவது பக்கத்தையும் காட்டத்தயார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் கிராமத்துடனான கலந்துரையாடல் திட்டத்தின் ஐந்தாவது கட்டம், அம்பாறை உஹன பகுதியில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த நல்லாட்சி காலத்தில் எதிர்கட்சியினர் மீது மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கள்களை நாம் கண்கூடாக பார்த்தோம்.திட்டமிட்ட குழுக்கள் மூலம் எதிர்க்கட்சிகளை பழி தீர்க்கும் விடயங்கள் அரங்கேற்றப்பட்டன.

அரசியலை முன்னிறுத்தி நாம் செயற்பட தயாரில்லை.அவ்வாறு செய்வதை எதிர்கட்சிகளும் விளங்க எடுத்துக்கொள்வதில்லை. நான் நந்தசேன கோதாபய நந்தசேன கோத்தாபயவுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன.

எமக்கு தேவை ஜனாதிபதி கோட்டாபய அல்ல முன்னர் இருந்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய எனவும் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும் என எமது பௌத்த தேரர்கள் என்னிடம் சில வேளைகளில் கூறுகிறார்கள். அதனையும் என்னால் செய்ய முடியும்.

அந்த முறையில் வந்தால் அதே முறையில் பதில் கொடுக்கவும் என்னால் முடியும்.

நான் பாதுகாப்பு செயளாலராக இருந்த போது பித்தளை சந்தியில் குண்டு வைத்து பிரபாகரன் வேலையை தொடங்கினார். ஆனால் பிரபாகனை நாம் நாயை போல நான்கு காலில் தவளவிட்டு முல்லிவாய்க்காளில் இருந்து பிணமாக கொண்டுவந்தோம்.

தேவை என்றால் அந்த பக்கத்தையும் காட்ட தயார். ஆனால் மக்களுக்கு சேவையாற்றுவற்கே எனக்கு தேவை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

தவறிழைத்தவர்களை தண்டிக்கவேண்டியது நீதித்துறையே என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி முன்னைய அரசாங்கம் போல நான் நீதித்துறையின் செயற்பாடுகளில் ஈடுபடவும் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவும் தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post