ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 நாட்களில் தன்னுடன் தொடர்புபட்ட அனைவரும் தனிமையில் இருக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டிக்கொண்டுள்ளார்.