கொவிட் 19 சுகாதார விதிமுறையை மீறி வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் நகரில் சுகாதார விதிமுறையை மீறி வகுப்பு நடத்துவதாக ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகருக்கு பொது மக்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து வகுப்பு நடத்திய குறித்த ஆசிரியைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆசிரியை நேற்று (08) ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளார்.

மேலும், கொவிட் 19 சுகாதார விதிமுறை சட்டத்தை மீறிய வகையில் இடம்பெற்ற வகுப்பிற்கு வருகைத்தந்திருந்த ஐம்பது மாணவர்கள் வரை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர் மெதவெல்ல தெரிவித்தார்