இந்த வார இறுதியில் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை 19 ஆக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக பிரதான ரயில் பாதையில் 6 ரயில்களும், கரையோர ரயில் பாதையில் 7 ரயில்களும், புத்தளம் ரயில் பாதையில் 3 ரயில்களும், களனிவெளி ரயில் பாதையில் 2 ரயில்களும், வடக்கு ரயில் பாதையில் 1 ரயிலும் இன்றும் நாளையும் சேவையில் ஈடுப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் தெமட்டகொட ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்படமாட்டாது என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது