அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் சிலரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ள ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய முதனிலை தொடர்பாளர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு நோய்த் தொற்றாளியுடன் நேரடித் தொடர்பு பேணிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.