பொலனறுவை – வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்தில் வைத்தியர்கள் இருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருகோணமலையில் இருந்து குறித்த நிலையத்தில் பணியாற்ற சென்ற இரு வைத்தியர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அவர்களுடன் பணியாற்றிய தாதியர்கள் உள்ளிட்ட 10 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,380 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் 598 பேர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அந்த வகையில், 8,143 பேர் நாடு முழுவதும் உள்ள சிகிச்சை நிலையங்களில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் 712 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியிருந்தனர். இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,051 ஆக உயர்ந்துள்ளது. 187 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.