இலங்கையில் மேற்கொள்ளப்படும் கட்டாயத் தகனக்கொள்கை ஒரு படி மிக அதிகம்!விமர்சித்துள்ள உலக தமிழர் பேரவை


சிறுபான்மை சமூகங்களின் புறக்கணிப்பு மற்றும் ஓரங்கட்டப்படுதலின் நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் கட்டாயத் தகனக்கொள்கை ஒரு படி மிக அதிகம் என விமர்சிக்கப்பட்டுள்ளது.

உலக தமிழர் பேரவை இந்த விமர்சனத்தை வௌியிட்டிருக்கிறது.

இந்த பகுத்தறிவற்ற மற்றும் பாரபட்சமானஅரசாங்கக் கொள்கையை மாற்றியமைக்க அனைத்து சமூகங்களின் தலைவர்களும் தங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்ளவேண்டும் என்று உலக தமிழர் பேரவை கோரிக்கை விடுத்திருக்கிறது.

கொரோனா உடலங்களின் தகனம் என்ற கட்டாயக்கொள்கை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு பெரும் சீற்றத்தையும் ,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்களின் மத கொள்கையின் படி ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும்.இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

அவர்களின் அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றும் படி கட்டாயப்படுத்துவது கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது என்றும் உலக தமிழர் பேரவை தெரிவித்திருக்கிறது.

தற்போதைய சூழலில் கொரோனாவால் மரணித்த உறவினர்களின் உடலங்களை உரிமை கோரவும் முஸ்லிம் சமுகத்தினர் மறுப்பு வௌியிட்டிருக்கின்றனர்.

இது அவர்கள் தமது மத நம்பிக்கைக்கு எதிரான செயலை விரும்பாததை தௌிவாக காட்டுகிறது.உலக சுகாதார அமைப்பு கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வது பொது சுகாதாரத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் இலங்கையில் மாத்திரமே இந்நடவடிக்கை்கு மறுப்பு தெரிவித்து வருவதாகவும் உலக தமிழர் பேரவை தெரிவித்திருக்கிறது.

(TW)

0/Post a Comment/Comments

Previous Post Next Post