உடன் அமுலாகும் வகையில் கொழும்பில் மற்றுமொரு பகுதி முடக்கம்!

 


கொழும்பு 09 இல் உள்ள வேலுவனராமய வீதி நேற்று நள்ளிரவு (26) முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

அந்த வகையில், மொத்தம் 12 பொலிஸ் பகுதிகளும், 68 கிராம சேவகர் பிரிவுகள் தற்போது நாடு முழுவதும் முடக்கப்பட்டிருப்பதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,380 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் 500க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அந்த வகையில், 8,143 பேர் நாடு முழுவதும் உள்ள சிகிச்சை நிலையங்களில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் 712 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியிருந்தனர். இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,051 ஆக உயர்ந்துள்ளது. 187 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post