கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அருகில் உள்ள பாடசாலைக்கு சென்று கல்வி கற்கும் முறை கண்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறை மெனிக்திவெல பாடசாலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை பரிசோதிப்பதற்காக வருகை தந்த மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே, அடுத்து வாரத்தில் கண்டி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்விப் பணிப்பாளர்களை அழைத்து ஏனைய பகுதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எந்தவொரு பிள்ளைகளுக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.