பிரதமருக்கு செல்வம் அடைக்கலநாதன் அனுப்பிய கடிதம்

 


-மன்னார் நிருபர் லெம்பட்-

வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதீக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக இழப்பீட்டை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று  (22) பிரமதர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்...

வன்னி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அண்மையில் ஏற்பட்ட புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் காற்று மழை காரணமாக கட்டிட இடிபாடுகள், மீன் பிடி படகுகள், இயந்திரங்கள், வலைகள், கடல் உபகரணங்கள், விவசாயம், சொத்துக்கள், உடைமைகள், குடியிருப்புகள் சேதமடைந்தும், காணாமலும் போயுள்ளன. பெரும்பாலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிய விவசாயிகளினால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது அவர்கள் எவ்வாறு இந்த சூழ் நிலையிலிருந்து மீள முடியும்?.

எனவே இந்த மக்களின் அவல நிலையைப் பார்க்கவும், இந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு அவர்களின் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தவும் உதவுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

பாதீக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை விரைவில் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த மக்களின் துன்பத்தைத் தணிக்க நீங்கள் முயற்சிப்பீர்கள் என்று நம்புகிறேன். என குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK