தனிமைப்படுத்தலில் இருந்து பிரதேசங்கள் சில விடுவிப்பு.!


கொழும்பில் உள்ள வீட்டுத்தொகுதிகள் சில தனிமைப்படுத்தலில் இருந்து உடனடியாக அமுலாகும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த தகவலை வழங்கினார்.

இதன்படி கொழும்பு, முகத்துவாரத்தில் உள்ள மெத்சந்த செவன, மிஹிஜய செவன, மட்டக்குளியில் உள்ள ரந்திய உயன, க்ராண்ட்பாஸில் உள்ள மோதர உயன, மற்றும் - சமகிபுர, தெமடகொடயில் உள்ள மிஹிந்துசெத்புர ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டி தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, மருதானை, தெமட்டகொடை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய காவல்துறை அதிகார பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வேகந்த, வனாதமுல்ல, சாலமுல்ல, ஹூனுபிட்டிய, 60 ஆம் தோட்டம், கோகிலா வீதி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் கெரவலபிட்டிய, ஹேகித்த, குறுந்துஹேன, எவரிவத்தை, வெலிகடமுல்ல, பெலிகொடவத்தை, கங்கபட, மீகஹவத்தை, பட்டிய வடக்கு, வேல்கொட வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் தலாவதுவ தொழிலாளர் அடுக்குமாடி குடியிருப்பும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, களுத்துறை, கண்டி, புத்தளம், அம்பாறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில காவல்துறை அதிகார பிரதேசங்களும் கிராம சேவகர் பிரிவுகளும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா புதிய சாலம்பைக்குளம் கிராமம் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா புதிய சாலம்பைக்குளம் பகுதியை சேர்ந்த தாய் ஒருவரும் அவரது மகளுக்கு கொவிட்-19 தொற்றுறதியானமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அந்த கிராமத்தை சேர்ந்த 40 பேரிடம் இன்று பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, தற்போதைய நிலைமைகளுக்கு அமைய பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க அவசியம் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேசந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

சாலாவ இராணுவ முகாமில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK