அலிசாஹிர் மெளலானாவால் கனத்தை மயானத்தில் போராட்டம் முன்னெடுப்பு


கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மெளலானா அமைதிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இப் போராட்டம் இன்று பொரள்ள , கனத்தை பொது மயானத்தில் நடைபெற்றுள்ளது.

கொவிட் -19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களது உடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கெதிராக அமைதியான முறையில் பலமான எனது எதிர்ப்பினை வெளியிடுகிறேன்.

குறிப்பாக, எரிக்கப்பட்ட வெறும் 20 நாட்களே ஆன பாலகன் ஷாயிக் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த 100 பேருக்காகவும், பல உடல்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்ட பொரள்ள மயானக்கதவிலே ஒரு வெள்ளைத் துணியினைக் கட்டுகிறேன்.

ஒரு தேசத்தின் கனத்த அவமானச் சின்னமாக மயானக் கதவினில் அது தொங்கட்டும் என இப்போராட்டத்தில் கலந்துகொண்ட அலிசாஹிர் மெளலானா கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post