விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

கொரோனா மரணமும் ஜனாஸா எரிப்பும் ஏற்றுக் கொள்ளவே முடியாது - நகர சபை உறுப்பினர் மஹ்தி


ஹஸ்பர் ஏ ஹலீம்

இஸ்லாமிய வழிகாட்டலின் பிரகாரம் மரணித்த ஒருவரின் ஜனாஸாவானது எந்த ஒரு வேதனையும் செய்யப் படாது நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் .

அதேநேரம் 182 இற்கு மேற்பட்ட நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை , உலக சுகாதார ஸ்தாபனம் போன்றவை  எரிப்பதற்கும் அடக்கம் செய்வதற்கும் முன்மொழிந்து சிபாரிசு செய்திருக்கின்ற போது அதற்கு மாற்றமாக இலங்கைத் திருநாட்டில் மாத்திரம்  எரித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பிரயோகிக்கப் படுவது வேண்டும் என்றே ஒரு சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்படுகின்ற சூழ்ச்சியே தவிர வேறு நியாயங்களை காணமுடியாது என கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எம்.எம்.மஹ்தி இன்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

தங்களுடைய அடிப்படை உரிமை மீறப்படக் கூடாது என்று கருதிய இந்நாட்டு முஸ்லிம்கள் அதனை தடுப்பதற்காக முதலில் அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து நீதிமன்றங்கள் ஊடாகவும்  போராடடத்தை தொடர்ந்தார்கள்.

நீதிமன்றில் முடியுமானவரை தங்கள் பக்க நியாயங்களை முன்வைத்த போதும் மரணித்த உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டன மிகவும் வேதனை அளிக்கின்றது. 

covid-19 வைரஸ் நிலத்தின் ஊடாக பரவும் என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லாமல் இருந்தும் இந்நாட்டின் நுண்ணுயிர் சார் நிபுணர் குழ எரிக்கத்தான் வேண்டும் என்ற பரிந்துரையை செய்திருப்பது ஏனைய நாடுகள், உலக சுகாதார நிறுவனங்களை விடவும் கோவிட் 19 வைரஸ் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இந்நாட்டில் இருக்கின்றார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது

covid-19 வைரஸ் ஆனது தொடுகை மூலமும்  காற்றின் மூலமும் பரவலாம் என்பதற்காக சமூக இடைவெளியையும், கை கழுவுகின்ற, மாஸ்க் அணிகின்ற முறைமைகளையும் முன்மொழிந்த இக்குழுவின் பரிந்துரை சரியானது நியாயமானது என்று எடுத்துக்கொண்டாலும் கூட கோவிட் 19 வைரசினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த ஒரு நோயாளி ஒருவரால் உபயோகப்படுத்தப்பட்ட ஆடைகள், கட்டில்கள், அவர்  பரிமாறிய பண நோட்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள் வைத்தியசாலை மலசலகூட உபகரணங்கள், அவர் இருந்த கட்டிடம், அவர் பாவித்த வாகனம், அவர் உமிழ்ந்த இடங்கள், அவரின் மூக்கிலிருந்து வெளியேறிய சளியம் வீசப்பட்ட இடங்கள் போன்ற அனைத்தையும் தேடித்தேடி எரிக்கவும் வேண்டுமல்லவா? 

கோவிட் 19 வைரஸை , அடையாளம் கண்டு ஆய்வுகள் செய்து அதற்கான மருந்துகளையும் கண்டுபிடித்து சிபாரிசு செய்கின்ற வல்லரசுகளும், மருத்துவத்தில் முன்னணி வகிக்கும் நாடுகளும் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கின்ற போது இலங்கை என்ற நம் நாட்டில் மாத்திரம் அனுமதி மறுக்கப்படுகின்றது என்றால் இது வேண்டுமென்று ஒரு சமூகத்தின் மீது திட்டமிட்டு செயற் படுத்தப்படுகின்ற ஒரு செயலே அன்றி வேறு எந்த நியாயமும் இல்லை. இச் செயற்பாடு இந்நாட்டில் வாழும் ஒரு சமூகத்திற்கு எதிராக திணிக்கப்படுகின்ற அடிப்படை உரிமை மீறலாகும.

எனவே இதுவிடயத்தில் எமது உரிமையை பெற்றுக் கொள்ளும் வரை ஆட்சியாளர்களுக்கு அனுசரணை வழங்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவினை தவிர்த்துக் கொள்வதும், அதற்கெதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்துவதும், சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்று அழுத்தங்களை பிரயோகிக்க நடவடிக்கைகள் எடுக்க வே‌ண்டும் எனவும் அரசியல் தலைமைகளை கொள்கிறேன்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK