(அஸீம்  கிலாப்தீன்)

ஹொரவ்பொத்தான, துட்டுவெவ பிரதேசத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தான பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்த இராணுவ வீரர் கொழும்பு, மோதரை பகுதியிலுள்ள இராணுவ முகாமில் பணியாற்றிய பின்னர் கடந்த 9 ஆம் திகதி ஹொரவ்பொத்தான துட்டுவெவ பிரதேசத்திலுள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

அதன் பின்னர் 10 ஆம் திகதி அவரிடமிருந்து பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தான பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அசெலா திசானநாயக்க தெரிவித்துள்ளார். 

மேலும் அவருடன் தொடர்பினைப் பேணியவர்களையும், அவர் சென்று வந்த இடங்களையும் விசாரித்து வருவதாகவும் ஹொரவ்பொத்தான பிராந்திய சுகாதார வைத்தியர் அதிகாரி தெரிவித்துள்ளார்.