பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான இருவரும் கடந்த 24 மணிநேரத்திற்குள் நாடு திரும்பியவர்களிடையே இருந்தவர்கள் என்று கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணி தெரிவிக்கின்றது.

06 இலங்கையர்கள் நேற்று நாடு திரும்பியிருந்தனர். அவர்களில் இருவர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள்.

பிரித்தானியாவுக்கான விமான சேவைகள் இரத்து செய்யவிருந்த திகதிக்கு முன்னதாகவே அங்கிருந்து இவர்கள் இருவரும் நாடு திரும்பியிருக்கின்றனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுக்குள்ளான இருவருடன், இத்தாலி, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்த ஏனைய நான்கு மேலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சுமார் 40 நாடுகள் பிரித்தானியாவுடனான போக்குவரத்தினை முழுமையாக நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.