உலகில் 194 நாடுகள் கொரோனாவால் மரணிக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்கின்றன - அசாத் சாலி


கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களை அடக்கம் செய்ய முடியும் என வைரஸ் தொடர்பான சகல நிபுணர்கள் கூறும் போது அரசாங்கம் அதற்கான அனுமதி வழங்காமல் இருப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 120 பேர் முஸ்லிம்கள்.

உலகம் முழுவதிலும் உள்ள 194 நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளன. இப்படி இருக்கும் போது இலங்கை எந்த விஞ்ஞானத்தின் அடிப்படையில் கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய மறுத்து வருகிறது?.

சளி கெட்டு போகும் போது கொரோனா வைரஸ் தொற்று நேர்மறையாகும். தொழிநுட்ப குழுவுக்கு இது புரியவில்லை எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post