தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டவர் கொரோனா நோயாளர் அல்ல என 19 நாட்களின் பின்னர் தெரியவந்துள்ளது.

தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றாளர் என உறுதி செய்யப்பட்ட கஹவத்தை வெல்லதுர பிரதேசத்தை சேர்ந்த நபர் இரனவில கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட 2 PCR பரிசோதனைகளின் அவர் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதியாகியமையினால் 19 நாட்களின் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார்.

அவரை அம்பியுலன்ஸ் வண்டி மூலம் தனது வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் தொழிலுக்கு செல்வதற்காக இந்த நபர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் PCR பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் கொரோனா தொற்றாளர் என உறுதியாகியமையினால் அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் கஹவத்தை, வெல்லதுர பிரதேசத்தை 47 பேர் தனிமைப்படுத்தப்பட்டு PCR பரிசோதகைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தனியார் வைத்தியசாலை PCR பரிசோதனையின் நம்பகத்தன்மை தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய இரண்டாவது முறையான இரனவில கொரோனா சிகிச்சை நிலையத்தில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை காரணமாக அவர் தனது வெளிநாட்டு தொழிலையும் இழந்துள்ளார்.