இலங்கையில் 23 ஆவதாக பதிவான கோவிட் -19 மரணம் தொடர்பில் அரசு தகவல் துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த பெண் 61 வயதுடைய ஒருவர் ஆவர்.  கொழும்பு 15 இல் உள்ள தனது வீட்டில் நேற்று அவர் உயிரிழந்த நிலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில், அவர் கோவிட் -19 வைரஸ் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்ட தாக அரசு தகவல் துறை தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.