கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் விவகாரம்! மறுபரிசீலனை செய்ய முடிவு - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Tuesday, November 3, 2020

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் விவகாரம்! மறுபரிசீலனை செய்ய முடிவு


கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான முடிவு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார், இது அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது முஸ்லிம்களை அரசாங்கம் குறிவைத்து இதனை மேற்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி, முழு பிரச்சினையையும் அரசியல்மயமாக்க முயல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது குறித்து முஸ்லிம்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த விடயத்தை அரசியல் மயப்படுத்தக்கூடாது என்று கூறிய அவர் இந்த விவகாரத்தை மருத்துவக் குழு பரிசீலித்து வருவதாகவும், அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் விஞ்ஞான பரிந்துரைகளின் அடிப்படையில் சடலங்களை தகனம் மட்டுமே செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நீதி அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவை மறு ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரம் குறித்த குழு கூடி ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment