கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள பொலிஸ் பெண் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிக்கும் 235 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் அந்த பரிசோதனை அறிக்கை கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது