இலங்கையில் 22 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு, ஜம்பெட்டா வீதியை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.