சர்ச்சைக்குரிய நீதி அமைச்சர் அலி சப்ரியின் தாயின் சகோதரி கொரோனா மரணம்! வெளியாகியது உண்மை நிலை! - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Saturday, November 21, 2020

சர்ச்சைக்குரிய நீதி அமைச்சர் அலி சப்ரியின் தாயின் சகோதரி கொரோனா மரணம்! வெளியாகியது உண்மை நிலை!


இலக்கம் 32 வலகம்பா மாவத்தை பொறுப்பன வீதி இரத்மலானை என்ற முகவரியில் வசிக்கும் அகமட் ஜூனைதீன் பாத்திமா நீலூசா என்ற 83 வயதுடைய பெண் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திடீரென உயிரிழந்தார். 

இந்த உயிரிழப்பு தொடர்பில் அறிந்து கொண்ட குடுபத்தினர் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்துள்ளனர். 

இந்த தகவலை அறிந்த பொது சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக குறித்த வலகம்பா மாவத்தை வீட்டிற்கு சென்றுள்ளனர். பாத்திமா நிலூஷாவின் சடலத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். 

இரத்மலானை பொது சுகாதார பரிசோதகர்கள் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று PCR பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த பரிசோதனையின் போது குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 

பின்னர் PCR பரிசோதனை முடிவு அறிக்கை மற்றும் சடலத்தை சுகாதார அதிகாரிகள் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் மத செயற்பாடுகளின் முடிவில் களுபோவில ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் பாத்திமாவின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்த தகவலை சிங்கள ஊடகம் ஒன்று குறித்த பெண்ணுக்கு இரண்டு PCR பரிசோதனைகள் பெறப்பட்டதாகவும் அதில் முதலாவது முடிவு கொரோனா தொற்றுக்கு நேர்மறையாக வந்ததன் காரணத்தால் அரசியல் அழுத்தங்களின் பின்னர் இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அது தொற்றுக்கு எதிர்மறையாக வந்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் Fact Crescendo Sri Lanka மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இதில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

மேலும் இவ்வாறு மரணித்த 83 வயது பெண், நீதி அமைச்சர் அலி சப்ரியின் சிறிய தாய் (தாயின் சகோதரி) என குறித்த சிங்கள ஊடகம் தெரிவித்திருந்தது. எனினும் குறித்த பெண் அமைச்சர் அலி சப்ரியின் தூரத்து உறவினர் எனவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீழே உள்ள இணைப்பின் மூலம் மேலதிக தகவலை சிங்கள மொழியில் அறிந்துகொள்ளுங்கள். Fact Check: https://srilanka.factcrescendo.com/2020/11/19/false-report-with-distorted-facts-about-a-death-of-a-muslim-woman-from-rathmalana/

No comments:

Post a Comment