பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு கூடவிருக்கிறது. கூட்டத்தொடர் பகல் 12.00 மணி வரை இடம்பெறவிருக்கிறது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்துள்ள இரண்டு கட்டளைகள் மீதான விவாதம் இன்று இடம்பெறவிருக்கிறது.

கொவிட்-19 பரவல் அபாயத்தை கருத்திற் கொண்டு கூட்டத்தொடருக்கான நேரத்தை வரையறுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பணிக்குழுவினரின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் மாத்திரமே பாராளுமன்ற வளாகத்திற்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17ம் திகதி நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறார்.